டெல்லியில் 27 வருடங்களுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. டெல்லியில் 70 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 36 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்க முடியும். தற்போது டெல்லியில் மும்முனை போட்டியில் நிலவிவரும் நிலையில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. 39க்கு 44 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என சாணக்யா ஸ்டார்டஜி நிறுவனம் கூறுகின்றது.
டெல்லியில் சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில் அங்கு பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த வாக்குறுதி அந்த கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் 2,100 பெண்களுக்கு வழங்கப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்த நிலையில் பாஜக சார்பில் பெண்களுக்கு மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் மூலம் 2500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதி பெரிய அளவில் கவனிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் பாஜகவிற்கு இது சாதகமாக மாறும் சூழல் அமைந்துள்ளதாக தெரிகிறது.