நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்ஃபாரா அருகே உள்ள மகராந்தா மல்லம் பகுதியில் தங்கும் விடுதியுடன் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பள்ளியில் இரவு 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 17 வயதுக்குட்பட்ட 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.