நமீபியா நிறுவப்பட்ட பின் முதல் அரசு தலைவராக பொறுப்பேற்ற நுஜோமா இயற்கை எய்தியது குறித்து, அந்நாட்டு அரசுத் தலைவர் ம்பாம்பாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 10-ஆம் நாள் இரங்கல் செய்தி அனுப்பினார்.
சீன அரசு மற்றும் சீன மக்களின் பேரில், முன்னாள் அரசுத் தலைவர் நுஜோமாவின் உறவினர்களுக்கும், நமீபிய அரசு மற்றும் மக்களுக்கும் ஷிச்சின்பிங் ஆழ்ந்த இரங்கல் மற்றும் மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்தார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீன அரசும், சீன மக்களும், இரு நாட்டின் பாரம்பரிய நட்புக்கு மதிப்பளிக்கின்றனர். இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், சீன-நமீபிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு மேலதிக வளர்ச்சியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.