ஏர்டெல் ஆதரவு பெற்ற ஒன்வெப், இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் புரட்சியில் முதல் நிறுவனமாக களமிறங்க தயாராகி வருகிறது.
இந்த நிறுவனம் வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு கிட்டத்தட்ட தயாராகியுள்ள நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறது.
ஒன்வெப் அதன் இரட்டை பூமி நிலைய நுழைவாயிலை லோ எர்த் ஆர்பிட் செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் இணைக்க விரைவான அனுமதிக்காக தொலைத்தொடர்புத் துறையை அணுகியுள்ளது.
25 நாடுகளில் செயல்பாட்டு வரும் ஒன்வெப், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் விரிவடைந்து வருகிறது.
இந்தியாவில், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பூமி நிலைய நுழைவாயில்களை நிறுவ திட்டமிட்டுள்ளது, இது இரு கடற்கரைகளிலும் விரிவான கவரேஜை உறுதி செய்கிறது.
இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் பந்தயத்தில் எலான் மஸ்கை முந்தும் ஏர்டெல்
