பாஜகவின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் சீனா நமது எதிரி அல்ல என்ற கருத்திலிருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளது.
சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் தெளிவுபடுத்தினார்.
அவரது எக்ஸ் பக்கத்தில், “நமது மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை, வெளி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு சீனா சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தியின் முக்கிய உதவியாளராக அறியப்படும் சாம் பிட்ரோடா, ஒரு நேர்காணலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தியா சீனாவை ஒரு எதிரியாக கருதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீனா குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்துக்களிலிருந்து பின்வாங்கியது காங்கிரஸ்
