2ஆவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலிக் கண்காட்சியில் 30 விழுக்காட்டைத் தாண்டும் வெளிநாடுகளின் பங்கேற்பு

2ஆவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலிக் கண்காட்சியின் ஆயத்த பணிகள் முறையாக நடந்து கொண்டிருக்கின்றன. நடப்புக் கண்காட்சியில் பங்கேற்றவுள்ள வெளிநாட்டுக் கண்காட்சியாளர்களின் விகிதம் 30விழுக்காட்டைத் தாண்டும். இதனால், 100க்கும் அதிகமான நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த அரசியல், வணிகம் மற்றும் கல்வித் துறையினர்கள் அதில் கலந்து கொள்வர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தவிரவும், உலக விநியோகச் சங்கிலியின் 2024ஆம் ஆண்டின் வளர்ச்சி பற்றிய அறிக்கையைச் சீன சர்வதேச வர்த்தக முன்னேற்ற சங்கம் இக்கண்காட்சியில் வெளியிடும். இந்த அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் உலக விநியோகச் சங்கிலியின் முக்கிய வளர்ச்சிப் போக்கு பன்முகங்களிலும் தொகுக்கப்பட்டு தற்போதைய வளர்ச்சி நிலைமை மற்றும் அதிலுள்ள குறைபாடுகள் ஆகியன அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்படும்.

You May Also Like

More From Author