ராமேஸ்வரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான மஹா சிவராத்திரி அன்று திருத்தேரோட்டமும், அன்றிரவு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
அதைதொடர்ந்து வரும் 27-ம் தேதி அக்னி தீர்த்க் கடலில் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.