விஜய்யை சீண்டிய எடப்பாடி பழனிசாமி..!! 

Estimated read time 1 min read

விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார், அவர் தேர்தலில் போட்டியிட்டுத் தனது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், விஜய் தனது ரசிகர்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் தாங்கள் மக்களை நம்பி களம் இறங்குவதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) செயல்படுவதாகவும், வரும் தேர்தலில் மேலும் சில கட்சிகள் தங்களது கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author