தென்னாப்பிரிக்காவின் கார்லட்டன்வில் பகுதியில் அமைந்துள்ள ‘போனெங்’ (Mponeng) தங்கச் சுரங்கம், உலகின் மிக ஆழமான இடமாக அறியப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 4 கிலோமீட்டருக்கும் அதிகம்.
இந்தச் சுரங்கத்திற்குள் நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடங்கள் போன்ற 10 கட்டிடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க முடியும்.
சுரங்கத்தின் தரைப்பகுதியை அடைய உலகிலேயே மிக உயரமான மின்தூக்கிகள் (Elevators) பயன்படுத்தப்படுகின்றன. மணிக்கு 64 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த லிஃப்ட்களில் கீழே செல்லவே 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகும்.
சுரங்கத்தின் ஆழத்தில் பாறைகளின் வெப்பம் 66°C வரை இருக்கும். தொழிலாளர்கள் வேலை செய்ய வசதியாக, தினமும் 6,000 டன் ஐஸ் கட்டிகள் (Ice Slurry) உள்ளே அனுப்பப்பட்டு வெப்பம் 28°C ஆகக் குறைக்கப்படுகிறது.
இந்தச் சுரங்கத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 8,000 கிலோ தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது. சுரங்கத்தின் சுரங்கப்பாதைகள் மட்டும் சுமார் 380 கி.மீ நீளம் கொண்டவை.
