10-ம் வகுப்பு முடித்தாலே போதும்..! இந்தியன் ரயில்வேயில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்…

Estimated read time 1 min read

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ (நிலை–1) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.

டிராக் மெயின்டெய்னர், அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சாரா பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். கணினி வழித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் www.rrbapply.gov.in அல்லது www.rrbchennai.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக 250 ரூபாயும், இதர பிரிவினருக்கு 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி (இரவு 11:59 மணி) கடைசி நாள் என்பதால், தகுதியுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author