செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
காலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் பூரி அருகே நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி வங்காள விரிகுடாவில் 91 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அட்சரேகை 19.52 N மற்றும் தீர்க்கரேகை 88.55 E இல் பதிவானதாக அவர் மேலும் கூறினார்.
வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்:கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது
