மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.
இந்த செயல்முறையின் சாத்தியமான தாக்கம் குறித்த கவலைகளை நிராகரித்து, தமிழ்நாடு ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட இழக்காது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“எல்லை மறுவரையறைக்குப் பிறகும், தெற்கின் எந்த மாநிலத்தின் இடங்களும் குறைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெளிவுபடுத்தினார்,” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் எல்லை நிர்ணயப் பணியில், மக்கள்தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது அடங்கும். இதில், தென் மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்களின் விகிதாச்சாரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.
எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா
