செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இது லெபனானில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழியை வகுத்தது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாயன்று அறிவித்தது.
“அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவை இன்று மாலை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற லெபனானில் ஒரு போர்நிறுத்த ஏற்பாட்டிற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இஸ்ரேல் இந்த செயல்பாட்டில் அமெரிக்காவின் பங்களிப்பை பாராட்டுகிறது மற்றும் எனினும் அதன் (இஸ்ரேல்) பாதுகாப்பிற்கு எதிராக ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் செயல்படுவதற்கான உரிமையையும் வலியுறுத்துகிறது ” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நவம்பர் 27 அன்று அதிகாலை 4 மணிக்கு அமலுக்கு வந்தது.