இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பான செபியின் புதிய தலைவராக துஹின் காந்தே பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலராக இருக்கிறார். தற்போது செபியின் தலைவராக இருக்கும் மாதபி புரி புச் பதவி காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் தற்போது புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 1987 ஆம் ஆண்டின் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் கேடர் ஆவார். முன்னாள் தலைவர் மாதபி பண முறைகேடு மற்றும் பங்கு விலை மோசடிகளில் ஈடுபட்ட அதானி குழுமத்திற்கு துணை போனதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தற்போதைய புதிய தலைவர் 3 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.