காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் குறைந்தது 60 இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 19 நிலவரப்படி, நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் மொத்தம் 955 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வௌவால் சடலத்தை சாப்பிட்ட பிறகு இறந்த மூன்று குழந்தைகளிடமிருந்து இந்த பாதிப்பு பரவியதாக நம்பப்படுகிறது.
காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், வயிற்று வலி மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
அழுகையும் இந்த நோயின் ஒரு அறிகுறியாக உள்ளது. சில நோயாளிகள் தங்கள் வாந்தி மற்றும் மலத்தில் இரத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கவலையளிக்கும் விதமாக, நோய் வேகமாக அதிகரிக்கிறது. அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் இறப்புகள் ஏற்படுகின்றன.
காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்
