சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவை துறையின் ஆய்வு மையம் மற்றும் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, நவம்பரில் சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு 50.3 விழுக்காடாகும். இது, ஆக்டோபரில் இருந்ததை விட 0.2 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம். ஆக்க தொழிற்துறை அல்லாத வணிக நடவடிக்கை குறியீடு 50.0 விழுக்காடாகும். இது, ஆக்டோபரில் இருந்ததை விட 0.2 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவு. ஒட்டுமொத்த பி.எம்.ஐ குறியீடு 50.8 விழுக்காடாக, நவம்பரில் இருந்ததற்குச் சமம். சீனப் பொருளாதாரம் மீதான வளர்ச்சி நிலைமை ஒட்டுமொத்த அளவில் நிதானமாக விரிவாகி வருகிறது. பொருளாதாரத்தின் முன்னேற்றப் போக்கு மேலும் சீராக மாறி வரும் சமிக்கை குறித்து சந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் அளவை முன்னிட்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு மேம்பட்டு வருகிறது. பெரிய ரக நிறுவனங்களின் பி.எம்.ஜ குறிப்பிட்டளவில் குறைந்த போதிலும், விரிவாக்க வரம்பில் உள்ளது. தொடர்புடைய தரவுகளின்படி, சந்தை மீதான எதிர்காலம் தொடர்ந்து சீராக உள்ளது. எதிர்கால சந்தை மீது பெரும்பாலான ஆக்க தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.