உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே உள்ள உயரமான எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் 55 தொழிலாளர்களில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள எட்டு பேரைக் காப்பாற்ற இந்திய ராணுவமும், மீட்புக் குழுவும், கடுமையான பனிப்பொழிவுடனும், நேரத்துடனும் போராடி வருகின்றனர்.
2 ஆம் நாள் தேடுதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்கிய இந்திய ராணுவம், மேலும் 14 பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மூன்று பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் ஜோஷிமத்துக்கு மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியது.
உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ளவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
