தமிழ்நாட்டில் முதல்முறையாக சட்டப்பேரவையில் வருகிற 14-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மார்ச் 14 அன்று தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவின் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.