அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் செயல்கள் மக்களின் ஆதரவைப் பெறவில்லை:சீனா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நியூயார்க்கில் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் ஆணையரையும் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், செப்டம்பர் 24ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளைப் பயன்படுத்தி, சீனாவின் மனித உரிமை நிலைமை பற்றி பழிதூற்றியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் செய்யும் இத்தகைய அரசியல் செயல்பாடுகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதை 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தெளிவான குரல்கள் முழுமையாக நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வாங் யீ மேலும் கூறுகையில் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் தந்திரங்களை ஏற்கனவே பார்த்துள்ளன. அமெரிக்கா மனித உரிமைகளைச் சாக்குபோக்காக கொண்டு சீனா மற்றும் வளரும் நாடுகளின் உள் விவகாரங்களில் மறைமுகமாக தலையிட முயற்சி செய்து வருவதை முஸ்லிம் நாடுகள் தெளிவாக அறிந்து கொண்டன. ஆனால், சீனாவோ மனித உரிமை பிரச்சினைகள் குறித்து பல்வேறு நாடுகளுடன் சமமான அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Please follow and like us:

You May Also Like

More From Author