தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதன்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை எவ்வாறு இருக்கும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் நிலை உள்ளிட்டவைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் முதன்முதலாக தமிழ்நாடு அரசு தனது பொருளாதார ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது