தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் மீன்பிடி தடை காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிவாரணத் தொகையை பெற தகுதி உள்ளவர்கள் முழுநேர மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டும். அதன் பிறகு 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட மீனவர்கள் இந்த நிவாரணத் தொகையை பெற தகுதியானவர்கள்.
இந்நிலையில் தமிழக அரசு தற்போது முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதாவது புதிதாக ரேஷன் கார்டு பெற்ற மீனவர்களுக்கும் இனி மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இதுவரையில் இந்த உத்தரவு அமலாகாமல் இருந்த நிலையில் இனி புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 8000 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.