சீனாவுத்து கூடுதல் சுங்கவரி வசூலிக்க, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா முன்மொழிந்தது குறித்த கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் லீன் ஜியான் பதில் அளித்தபோது, வர்த்தக போரிலும், சுங்கவரி போரிலும் வெற்றியாளர்கள் இல்லை. மற்றவரின் விளக்கை ஊதி அணைப்பதன் மூலம், தனது சொந்த ஒளியை பிரகாசமாக்க முடியாது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பல்வேறு தரப்புகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளையும் சந்தை பொருளாதார கோட்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்.
ஒன்றுக்கொன்று மதிப்பளிக்க கூடிய சமத்துவமான பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம், தத்தமது அக்கறை கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.