சீனாவில் ஃபெண்டானில் பொருட்களுக்கான கட்டுப்பாடு பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் மார்ச் 4ஆம் நாள் வெளியிட்டது.
இவ்வறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில், ஃபெண்டானில் பொருட்களுக்கான கட்டுப்பாட்டுக்கு சீனா பெருமளவில் முக்கியத்துவம் அளித்து, இப்பொருட்களின் அளவுக்கு மீறிய பன்பாட்டைத் தடுத்து, இப்பொருட்களின் கள்ள கடத்தல், தயாரித்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை ஒடுக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச போதைப்பொருள் தடைக்கான ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தைப் பயனுள்ள முறையில் நடத்தி, ஃபெண்டானில் பொருட்கள் தொடர்பான பிரச்சினையைச் சமாளிப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மார்ச் 4ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், ஃபெண்டானில் தொடர்புடைய மருந்துகளின் கட்டுப்பாடு, ஃபெண்டானில் பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுத்தல், ஃபெண்டானில் பொருட்களுக்கான உலகளாவிய கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் பணிகள் மற்றும் அனுபவங்கள் குறித்து இவ்வறிக்கையில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக சீனாவின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை பல்வேறு துறையினர்கள் மற்றும் சர்வதேச சமூகம் பன்முகங்களிலும் அறிந்து கொள்வதற்கு இது துணைப் புரியும் என்றார். மேலும், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்தை சீனா எப்போதுமே செயல்படுத்தி, போதைப்பொருள் தடை பற்றிய கட்டாய பணியை நடைமுறைப்படுத்தி, போதைப்பொருள் தடைக்கான சர்வதேசப் பணிகளில் ஆழமாகப் பங்கெடுத்து, பல்வேறு நாடுகளுடன் ஃபெண்டானில் பிரச்சினையைக் கூட்டாக சமாளிப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.