கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் மீதான புதிய 25 சதவீத வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கி, டிரம்ப் பரஸ்பர வரிகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டார்.
இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக பங்காளிகளான கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று, பதவியேற்ற பிறகு அமெரிக்க காங்கிரசில் அவர் நிகழ்த்திய முதல் கூட்டு உரையின் போது டிரம்ப், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.
ஏப்ரல்-2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்க டிரம்ப் உறுதி
