2025ஆம் ஆண்டிற்கான Knight Frank Wealth அறிக்கையின்படி, இந்தியா அதன் பில்லியனர்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் (HNWI) மக்கள்தொகையில் முன்னோடியில்லாத வளர்ச்சியைக் காண்கிறது.
நாட்டில் இப்போது மிகப்பெரிய வியத்தகு அளவில் 191 பில்லியனர்கள் உள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு வியக்கத்தக்க வகையில் இந்த எண்ணிக்கை 12% அதிகரித்து வருகிறது.
இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டில் 26 புதிய பில்லியனர்கள் சேர்க்கப்பட்டனர்.
இது மிகவும் பணக்கார நபர்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.
இதற்கு நேர்மாறாக, 2019ஆம் ஆண்டில் 7 புதிய பில்லியனர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக, இந்த பில்லியனர்கள் 950 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
இது பில்லியனர் செல்வக் குவிப்பில் உலகளவில் இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது
