சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் பிற்பகல், 14வது சீன தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில் ஜியாங் சூ மாநிலப் பிரதிநிதிக் குழுவினர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், “14வது ஐந்தாண்டுத் திட்டத்தின்” வளர்ச்சி இலக்குகளை வெற்றிகரமாக அடையும் வகையில், பொருளாதார ரீதியாக பெரிய மாகாணங்கள், முக்கிய கடமைகளை முன்வந்து ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தை தொழில்துறை புத்தாக்கத்துடன் இணைப்பதில் ஜியாங் சூ மாநிலம் முன்னணியில் இருக்கவும், சீர்திருத்தத்தை ஆழமாக்குவதையும் உயர்நிலை திறப்புப் பணியையும் ஊக்குவிப்பதில் தைரியமாக இருக்கவும் வேண்டும் என்றும், முக்கிய தேசிய வளர்ச்சி உத்திகளை செயல்படுத்துவதில் முன்னணியில் இருக்கவும், அனைத்து மக்களுக்கும் கூட்டுச் செழிப்பை ஊக்குவிப்பதில் ஒரு முன்மாதிரி அமைக்கவும் வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் ஜியாங் சூ மாநிலப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.