தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3-ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் மே மாதம் 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆகஸ்ட் 7ஆம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியிலும் தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
