ராய்ப்பூர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று இந்திய கிரிக்கெட் அணி பட்டம் வென்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் தலைமையில் விளையாடியது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், டுவைன் ஸ்மித் (45 ரன்கள்) மற்றும் லெண்டில் சிம்மன்ஸ் (57 ரன்கள்) தவிர மற்றவர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025: முதல் சீசனில் பட்டத்தை வென்றது இந்திய அணி
