14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின் நிறைவு கூட்டம் 11ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதில் கலந்துகொண்டார்.
அரசுப் பணியறிக்கை, சீன குடியரசு தேசிய மக்கள் பேரவை மற்றும் பல்வேறு நிலை மக்கள் பேரவை சட்டத்தைத் திருத்தம் செய்வது, 2024ஆம் ஆண்டு சீன பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிலைமை, 2025ஆம் ஆண்டு சீன பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி திட்டம், 2024ஆம் ஆண்டு மத்திய மற்றும் பிராந்திய வரவு செலவு திட்டத்தின் அமலாக்க நிலைமை, 2025ஆம் ஆண்டு ஆண்டு மத்திய மற்றும் பிராந்திய வரவு செலவு தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை, அதியுயர் மக்கள் நீதி மன்றத்தின் பணியறிக்கை, அதியுயர் மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கை ஆகியவை பற்றிய தீர்மானங்கள் இதில் அங்கீகரிக்கப்பட்டன.