நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக செலவிட்ட பிறகு, தற்போது பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
அவர்களின் திரும்பும் பயணம் மார்ச் 18 செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது என்று நாசா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சக விண்வெளி வீரர்களான அமெரிக்காவின் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் பயணிக்க உள்ளார்கள்.
அவர்கள் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதி செய்தது நாசா
