வார விடுமுறையையொட்டி ஏற்காட்டிற்கு ஏராளமாக பெண்கள் படையெடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் என்பதாலும், எப்போதும் இதமான சூழல் காணப்படுவதாலும் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பலூன் சுடுதல், ரைப்பில் ஷூட் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.