ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சோங் பிப்ரவரி 24ஆம் நாள் ஐ.நா. பொது பேரவை நடத்திய உக்ரேன் பிரச்சினை பற்றிய அவசரச் சிறப்புக் கூட்டத்தில் கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து அமெரிக்காவும் ரஷியாவும் எட்டியுள்ள ஒத்த கருத்து உள்ளிட்ட அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிக்கிறது என்றார்.
இக்கூட்டத்தில் கட்டுப்பாட்டு ஆற்றல் இல்லாத தீர்மானம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் உக்ரைனில் “பகைமை நடவடிக்கைகளை” ரஷியா முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தது. இந்த ஆண்டுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசர தேவையையும் மீண்டும் வலியுறுத்துகிறது. அமெரிக்கா, ரஷியா முதலிய 18 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. சீனா, இந்தியா முதலிய 65 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.