நெல்லை மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதையொட்டி, 12 நாட்களுக்கு பின் மீண்டும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24-ம் தேதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த 2-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த 3-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அருவியில் குளிக்க தடை நீடித்தது. இந்நிலையில் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.