சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய நிதி மற்றும் பொருளாதாரக் கமிட்டி அலுவலகத்தின் தலைவருமான ஹெலிஃபெங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் முன்னாள் அமெரிக்க நிதி அமைச்சர் ஹென்றி மெரிட் பால்சனைச் சந்தித்துப் பேசினார்.
சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, உலகப் பொருளாதாரம் முதலியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஹெலிஃபெங் கூறுகையில், சீனப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியுடன் மீட்சிப் போக்கை நிலைநிறுத்தி வருகின்றது. புத்தாக்கத்தால் இயக்கப்படும் வளர்ச்சி சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார்.
அமெரிக்க-சீன உறவு மிக முக்கியமானது. பசுமையான மாற்றம் என்பது வளர்ச்சிப் போக்காகும். அமெரிக்க-சீனா உறவின் நிதானம், பசுமை மற்றும் குறைந்த கார்பன் வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற பால்சன் நிதியம் விரும்புகின்றது என்று பால்சன் தெரிவித்தார்.