சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ராமபோசாவை நவம்பர் 21ஆம் நாள் ஜொகன்னஸ்பர்கில் சந்தித்து பேசினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலின் கீழ், சீனாவும் தென்னாப்பிரிக்காவும் புதிய காலத்தின் விரிவான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை கூட்டாக முன்னேற்றி வருகின்றன என்று தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவுடன் பாரம்பரிய நட்புறவை வெளிகொணர்ந்து, பரஸ்பர அரசியில் நம்பிக்கையை ஆழமாக்குவதோடு, பொருளாதாரம், வர்த்தகம், வாழ்வாதாரம், பண்பாட்டு மற்றும் மக்களின் பரிமாற்றம் உள்ளிட்ட ஒத்துழைப்புகளை விரிவாக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ராமபோசாவ் கூறுகையில், தென்னாப்பிரிக்கா ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியுடன் பின்பற்றி வருகின்றது. பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், சுகாதாரம் உட்பட துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
