திண்டுக்கல் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.
75 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் குடமுழுக்கு 20 ஆண்டுக்குப் பிறகு நடைபெற்றது. சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடத்தினர்.
காசி, தலைக்காவிரி, ராமேஸ்வரம், திருமூர்த்தி அணை, கங்கை, பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.