சென்னையில் பொதுமக்கள் பெரிதும் நாடும் பொது போக்குவரத்தில் ஒன்று தான் இந்த மின்சார ரயில் சேவை.
இது தினசரி அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு ஒரு வரப்ரசாதமாகவே உள்ளது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்புப் பாதை பராமரிப்பு காரணமாக, இன்று காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயங்காது.
அதே நேரத்தில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 11:55 மணி முதல் குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.