இந்திய-சீன உறவு பற்றி இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் மார்ச் 17ஆம் நாள் கூறுகையில், சீனா இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்றார். கடந்த அக்டோபர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடனான கசானில் சந்திப்பு, சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு நெடுநோக்கு வழிக்காட்டியுள்ளது. அண்மையில், இரு தரப்புகள் இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துகளைச் செயல்படுத்தி, பல்வேறு நிலைகளிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சாதனைகளைப் பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுடன் இணைந்து கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.