பிரெஞ்சு அரசுத் தலைவருக்கான வெளிவிவகார ஆலோசகர் எம்மானூல் பொன்னுடன் வாங்யீ தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையத்தின் தலைவருமான வாங்யீ,மார்ச் 18ஆம் நாள்,  பிரெஞ்சு அரசுத் தலைவருக்கான வெளிவிவகார ஆலோசகர் எம்மானூல் பொன்னேயுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

தற்போதைய நிலைமையில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தையின் மூலம் வர்த்தக சர்ச்சையைத் தீர்ப்பது என்பது முக்கியமானது ஆக்கப்பூர்வமானது. இரு தரப்புறவை விரைவுபடுத்தி, சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுக்கான சீரான, நிதானமான வளர்ச்சியைத் தூண்ட சீனத் தரப்புடன் இணைந்து பிரான்ஸ் பாடுபட வேண்டும் என்று வாங்யீ இதில் விருப்பம் தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான சர்வதேச நிலைமை எனும் பின்னணியில், சீனாவின் உயர் நிலை தரப்புகளுடன் தொடர்புகளை நிலைநிறுத்தி, உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் அடிப்படையில் வருவான சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்புமுறையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று பொன்னே தெரிவித்தார்.

தவிரவும், உக்ரைன் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் ஆழமாக விவாதித்துள்ளனர்.

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author