நேபாளத்துக்கான சீனத் தூதர் சென்சோங் விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கூறுகையில், இந்த விமானச் சேவை, இரு நாட்டு மனித தொடர்பு பரிமாற்றம், நேபாளத்தின் சுற்றுலா தொழிற்துறையின் வளர்ச்சி ஆகியவற்றுக்குத் துணை புரியும் என்றார்.
மேலதிக சீன நகரங்களிலிருந்து போக்ரா நகருக்கான வணிக விமானச் சேவைகள் திறக்கப்பட வேண்டும் என்று போக்ரா நகரின் தலைவர் டானா ராஜ் ஆச்சார்யா விருப்பம் தெரிவித்தார்.
