தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 18 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.
பழைய குற்றால அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே அருவியை முற்றிலுமாக கையகப்படுத்தியுள்ள வனத்துறையினர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 70 சதவீத பணிகள் நிறைவடைந்ததாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், அருவியில் நீர்வரத்து சீரானதால் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தையொட்டி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வனக்காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.