குடியுரிமை (திருத்த) விதிகள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மோடி அரசு குடியுரிமை (திருத்த) விதிகள், 2024ஐ அறிவித்தது. இந்த விதிகள் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும்.
மோடி அரசு இன்று குடியுரிமை (திருத்த) விதிகள், 2024ஐ அறிவித்தது. இந்த விதிகள் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும்.
இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள்…
— Office of Amit Shah (@AmitShahOffice) March 11, 2024
இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் மற்றொரு உறுதிப்பாட்டை ஈடேற்றி, அந்த நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.