திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழ இன்று தொடங்குகிறது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீது ஏழுமலையான் கோயில் உள்ளது.
இங்கு நாள்தோறும் சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழா இன்று தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று இரவு சீதா, லட்சுமண, ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்கரணியில் தெப்பத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் சஹஸ்ர தீப அலங்கார சேவை, வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீப அலங்கார சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.