6ஆவது சீன மக்கள் உடல்நிலைக் கண்காணிப்பு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளின் நிலைமை பற்றிய ஆய்வுப் பணி அண்மையில் துவங்கியது.
3முதல் 79 வயது வரையிலான சீன மக்களிடம் உடல் நிலைமைக் கண்காணிப்பு நடத்தப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நடவடிக்கைகள் நிலைமை பற்றிய ஆய்வானது, சீனாவின் 31 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் சீரற்ற முறையில் ஒரு லட்சத்து 43ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து நடததப்படும்.
உடற்பயிற்சியில் பங்கெடுக்கும் நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் எண்ணிக்கை, உடற்பயிற்சிக்கான இடங்கள் மற்றும் வசதிகள், போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட துறைகளில் நுகர்வு நிலைமை முதலியவை இந்த ஆய்வில் அடங்கும்.