இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களுக்கு ஒப்படைக்கிறார்.
அன்றைய தினம், பெண்கள் பிரதமரின் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பெண்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்
