இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திங்களன்று இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழிவகுத்தது.
399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி காலை நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 95/1 என்று இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராவ்லி 73 ரன்களும், பென் ஃபாக்ஸ் (36), டாம் ஹார்ட்லி (36) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,
ஆனால் நான்காம் நாளில் இரண்டாவது செஷனில் இங்கிலாந்து 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, பதிலுக்கு இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 143 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்த இந்தியா 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.