குவாலியர் : இந்திய அணியுடன் வங்கதேச அணி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் நேற்று டி20 தொடரானாது தொடங்கப்பட்டது.
அதன்படி, நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், சிறந்த பந்து வீச்சையும், அட்டகாசமான பவுலிங்கையும் செய்த இந்திய அணி வீரர்களும், இந்தியா அணியும் பல ரெக்கார்டுகளை உடைத்துள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் , சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது. இது இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் தொடரிலிருந்து தற்போது வரை நீடித்து வருகிறது.
இந்திய அணி இதுவரை தொடர்ந்து 12 முறை தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்க இன்னும் தொடர்ந்து 5 வெற்றிகள் வேண்டும். இதனால் தொடர் வெற்றிகளை ஒரு ஆண்டில் அதிக முறை பதிவு செய்த அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.
அதே போல சேசிங்கில் இந்திய அணி அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற பட்டியலில் நேற்று நடந்த போட்டி முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்வே அணியுடன் 41 பந்துகள் மீதம் வைத்து வெற்றிப் பெற்றிருந்தது. ஆனால், நேற்று நடைபெற்ற வங்கதேச அணியுடனான போட்டியில் 49 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும், இந்திய அணியின் இளம் வேக பந்து வீச்சாளரான மாயங் யாதவ் தனது அறிமுகப் போட்டியிலேயே சாதனைப் படைத்துள்ளார். இவர் அறிமுகமான முதல் போட்டியில், இவர் வீசிய முதல் ஓவரை ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் மெய்டன் செய்த்துள்ளார். இதன் மூலம், அறிமுகமான முதல் போட்டியில் மெய்டன் செய்த 3-வது இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் நிகழ்த்தி உள்ளார்.
இதற்கு முன் இந்திய வீரர்களான அஜித் அகர்கர், அர்ஷதீப் சிங் இவர்களுக்கு அடுத்தபடியாக மாயங் யாதவ் இந்த ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 30 ரன்களும் அதனுடன் 1 விக்கெட்டும் எடுத்து டி20 அரங்கில் 11-வது முறையாக இந்த ரெக்கார்டை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.