மாலத்தீவு-சீனா இடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த மாலத்தீவு எப்போதும் பாடுபடும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் முய்சு 5ஆம் நாள் தெரிவித்தார்.
புதிதாகப் பதவி ஏற்றுள்ள அந்நாட்டுக்கான சீனத் தூதர் கோங் சியென்குவா, இதே நாளில், முய்சுக்கு ஏற்பு கடிதத்தை ஒப்படைத்தார்.
மாலதீவு பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆற்றியுள்ள பங்குகளை முய்சு வெகுவாகப் பாராட்டினார்.
மாலதீவு-சீன நட்பார்ந்த ஒத்துழைப்புகளை ஆழமாக்க மாலத்தீவு எப்போது பாடுபடும். ஒத்துழைப்புக்கான சாதனைகளின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை மாலதீவு விரைவுப்படுத்தி வருகிறது என்று முய்சு தெரிவித்தார்.