சீனாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு
சீனத் தங்கச் சங்கம் 25ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில், சீனாவில், தங்க நுகர்வுத் தொகை 1089.69 டன்னாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 8.78 விழுக்காடு அதிகரித்துள்ளது
. இதில் தங்க நகைகளின் நுகர்வுத் தொகை 706.48 டன்னாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.97 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தவிரவும், தங்கக் கட்டி மற்றும் தங்க நாணயத்தின் நுகர்வுத் தொகை 299.6 டன்னாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.