சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியான் லூங்குடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார்.
சிங்கப்பூர் தலைமை அமைச்சராகப் பதவியேற்ற போது, லீ சியான் லூங் தலைமையில் சிங்கப்பூர் அடைந்த சிறந்த பல சாதனைகளை ஷச்சின்பிங் வெகுவாகப் பாராட்டினார். அடுத்த ஆண்டு சீன-சிங்கப்பூர் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 35வது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில், இரு தரப்புகள் உயர் மட்டத்திலான தொடர்பை நெருக்கமாகவும், வளர்ச்சித் திட்டங்களின் இணைப்பை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்கவும் வேண்டும். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மை கொண்டு வந்து, பிராந்திய மற்றும் உலகின் செழுமைக்கு பெரிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷசிச்சின்பிங் கூறினார்.
சீனாவின் சுசோ தொழில் பூங்கா அமைக்கப்பட்டு இவ்வாண்டு வரை 30வது ஆண்டு நிறைவு நிறைவுபெறுகிறது. இந்த தொழில் பூங்கா, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்புக்கான சிறந்த மாதிரியாக உள்ளது. சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியில் சிங்கப்பூர் ஆழமாக கலந்து கொண்டதற்கான முக்கிய சாட்சியாகவும் திகழ்கிறது. மேலும், சீனாவுடனான ஒத்துழைப்பின் முன்னோடியாக தொடர்ந்து சிங்கப்பூர் செயல்பட்டு, சீன-சிங்கப்பூர் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினர்
சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வரும் சிங்கப்பூர், சீன நவீனமயமாக்கலில் முனைப்புடன் கலந்து கொள்ளும். தற்போதைய சிக்கலான சர்வதேச சூழலில், பல்வேறு நாடுகள் நீண்டகாலப் பார்வையில் பலதரப்புவாதத்தைப் பின்பற்றி, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, இடர்பாடு மற்றும் அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று லீ சியான் லூங் சந்திப்பில் கூறினார்